நடுவீதியில் பறிபோன இளைஞனின் உயிர் : அதீத வேகத்தால் விபரீதம்!!

310

களுத்துறை – ஹொரணை, திக்ஹேனபுர பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த விபத்துச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (06.11.2026) இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மரத்திலும் கொங்கிறீட் வடிகாலிலும் மோதியதில், இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் பொருவடண்ட பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.