ராகு – கேது பெயர்ச்சி உச்சத்திற்கு செல்லும் 5 ராசிகள் இவைதான்!!

24

2026 ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் திகதி நிகழும் ராகு – கேது பெயர்ச்சியில், ராகு பகவான் கும்ப ராசியிலிருந்து மகர ராசிக்கும், கேது பகவான் சிம்ம ராசியிலிருந்து கடக ராசிக்கும் இடம் பெயருகின்றனர்.

இந்தப் பெயர்ச்சியினால் அடுத்த ஒன்றரை ஆண்டுக்கு, பன்னிரண்டு ராசியினருக்கும் ஏற்படக் கூடிய பலன்கள் கிடைக்கவிருப்பினும் குறித்த 5 ராசிகளுக்கு கிடைக்கப்போகும் பலாபலன்கள் எவையென நாம் இங்கு பார்ப்போம்.

கன்னி

ராகு உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்துக்கும் கேது பதினோராம் இடத்துக்கும் வரக்கூடிய அமைப்பு இந்தப் பெயர்ச்சியால் ஏற்படுகிறது. தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கக்கூடிய காலகட்டம். அலுவலகத்தில் அல்லல்களை திறமையாலும் உழைப்பாலும் புறம்தள்ளலாம்.

மனம்போல இடமாற்றம், பதவி உயர்வுகள் கிட்டும். மேலதிகாரிகள் ஆதரவு அதிகரிக்கும். பிறருடைய குறைகளைப் பெரிதுபடுத்திப் பேச வேண்டாம். புதிய பொறுப்புகளில் கவனமான, கடினமான உழைப்பு அவசியம். புதிய பணிக்காக காத்திருப்போர், திறமையாலும் முயற்சியாலும் அதைப் பெறுவதுதான் நல்லது.

குடும்பத்தில் மகிழ்ச்சி மலரும். வாழ்க்கைத் துணையுடன் அன்யோன்யம் அதிகரிக்கும். சுபகாரியத் தடைகள் விலகும். வீடு, வாகனம் வாங்க, புதுப்பிக்க வாய்ப்பு வரும்.

வாரிசுகளால் பெருமை சேரும். பழைய கடன்கள் பைசல் ஆகும். புதிய கடன்களை ஆடம்பரத்துக்காக வாங்க வேண்டாம். அசையா சொத்துகள் வாங்கும் சமயத்தில் கவனச் சிதறல் கூடாது. எதிர்பால் நட்புகளால சங்கடம் வரலாம்.

விருச்சிகம்

உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்துக்கு ராகு, ஒன்பதாம் இடத்துக்கு கேது வரக்கூடிய பெயர்ச்சி இது. சோம்பலை விரட்டிவிட்டு சுறுசுறுப்பாகச் செயல்பட்டால் சுபிட்சங்கள் அதிகரிக்கக் கூடிய காலகட்டம். பணியிடத்தில் திட்டமிட்டும் நேரம் தவறாமலும் செயல்படுவது அவசியம்.

அயல்நாடு, வெளியூர் செல்லும் வாய்ப்புகள் வரலாம். பொறுப்புகளை திட்டமிட்டும் நேரம் தவறாமலும் செய்வது அவசியம். மேலிடத்து ஆதரவு அதிகரிக்கும். அனுபவம் மிக்கவர்கள் ஆலோசனைகளை தவிர்க்காமல் கேளுங்கள். உழைக்கத் தயங்காமல் இருந்தாலே உங்கள் முன்னேற்றம் முடுக்கிவிடப்படும், உணர்ந்து செயல்படுங்கள்.

இல்லத்தில் இன்சொல்பேசினால் இனிமை இடம்பிடிக்கும். இந்த சமயத்தில் உறவோ நட்போ உங்கள் குடும்ப விஷயத்தில் தலையிடாமல் பார்த்துக்கொள்வது அவசியம். வாரிசுகள் வாழ்க்கையில் வசந்தம் வரும்.

சுபகாரியத் தடைகள் விட்டுக் கொடுத்தால் விலகும். ஆடை, ஆபரணம் சேரும். சிலருக்கு பூர்வீக சொத்துகளால் ஆதாயம் வரும். வாழ்க்கைத்துணை உடல்நலத்தில் அக்கறை செலுத்துங்கள்.

மகரம்

தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கக் கூடிய காலகட்டம். அதேசமயம், அசட்டுத் துணிச்சலைத் தவிர்ப்பது அவசியம். பணியிடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கலாம். திட்டமிட்டு, நேரடி கவனத்துடன் செய்தால் முன்னேற்றம் நிச்சயம். பிறருடைய செயலையும் தவறையும் பெரிதுபடுத்திப் பேசவேண்டாம்.

மேலதிகாரிகளிடம் பேசும்போது துணிவைவிட பணிவுதான் நல்லது. பணி மாற நினைப்பவர்கள் குறுக்கு வழிக்கும் தவறான வழிகாட்டலுக்கும் தலையசைத்து, இருப்பதை விட்டுப் பறப்பதைப் பிடிக்க நினைத்தா, ஏமாற்றம்தான் எஞ்சும். உணர்ந்து செயல்படுங்கள். குடும்பத்தில் குதூகலமான சூழல் நிலவ ஆரம்பிக்கும்.

வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதம் வேண்டாம். அக்கம்பக்கத்து நட்பில் எல்லை மீறினால், வசந்த காலம், கசந்த காலமாக மாறிவிடும். சுபகாரியங்களில் பெற்றோர் ஆலோசனையை அவசியம் கேளுங்கள். வாரிசுகளிடம் அதிகாரத்தைக் காட்டாமல் அன்பைக் காட்டுங்கள்.

அசையும், அசையா பொருள் சேரும். புதிய அறிமுகங்களை வீட்டுக்குள் அனுமதிக்க வேண்டாம். செய்யும் தொழிலில் லாபம் சீராகும். செழிப்பு நிலைக்க முழு உழைப்பு அவசியம்.

அயல்நாட்டு வர்த்தகத்தில் திடீர் மாற்றங்கள் எதையும் செய்ய வேண்டாம். கூட்டுத்தொழிலில் நேரடி கவனம் அவசியம். முக்கியமான பத்திரங்களை பத்திரமாக வையுங்கள். கலை, படைப்புத் துறையினர் வாய்ப்பு ரகசியங்களை பிறரிடம் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.

கும்பம்

உங்கள் ராசிக்குப் பன்னிரண்டாம் இடத்திற்கு ராகுவும், ஆறாம் இடத்துக்குக் கேதுவும் வரக்கூடிய பெயர்ச்சி இது. எந்த சமயத்திலும் முழுமையான முயற்சியும் அமைதியான செயல்களும் இருந்தால், நன்மைகள் அதிகரிக்கக் கூடிய காலகட்டம். அலுவலகத்தில் உங்கள் திறமைகளுக்கு உரிய உயர்வு கிட்டும்.

புதிய பணிவாய்ப்பு மனம்போல அமையும். எதிர்பார்த்த இடமாற்றமும் பதவி உயர்வும் கைகூடும். இந்த சமயத்தில், உடனிருப்போர் செயல்களால் உணர்ச்சிவசப்படுவதும் பிறரைக் குறைசொல்வதும் வேண்டாம்.

மூன்றாம் நபர் விஷயத்தில் மூக்கை நுழைப்பதும் கூடாது. குதர்க்கமும் குத்திக்காட்டலும் தவிர்த்தால், குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். பெற்றோர், பெரியோர் ஆசி கிட்டும். குலதெய்வ வழிபாட்டினை மேற்கொள்ள சந்தர்ப்பம் வரும்.

பணவரவு சீராகும். சுப காரியங்களில் நிதானம் முக்கியம். தனவரவு கைகூடும். ரத்த பந்தங்களிடம் விட்டுக் கொடுத்துப் போவதே நல்லது. வாழ்க்கைத் துணை உடல்நலம் சீராகும். ஆடை, ஆபரணம் சேரும். அசையும் அசையா பொருள் வாங்குதல் விற்றலில் கவனம் முக்கியம்.

மீனம்

உங்கள் ராசிக்கு பதினோராம் இடத்துக்கு ராகுவும், ஐந்தாம் இடத்துக்குக் கேதுவும் வரக்கூடிய பெயர்ச்சி இது. இந்தக் காலகட்டத்தில் வீண் சலிப்பு தவிர்த்து பொறுப்பு உணர்ந்து செயல்பட்டால், நிம்மதி நிலைக்கும். அலுவலகத்தில் உயர்வுகள் உற்சாகம் தரும். அதேசமயம், வீண் தர்க்கம் தவிர்ப்பதும், திட்டமிடலும் நேரம்தவறாமையும் மிகமிக அவசியம்.

பொறுப்புகளை பிறரை நம்பி ஒப்படைக்க வேண்டாம். முக்கியமான கோப்புகளை உரிய அனுமதிபெற்று நகல் எடுத்து வைத்துக் கொள்வது நல்லது. அவசரத்தினால் கோப்புகளைக் கைமாற்றி வைக்க நேரிடலாம், கவனம் முக்கியம். அலுவலகத்தில் வலைதள கேளிக்கை உலாவல்களை அறவே தவிருங்கள்.

குடும்பத்தில் வீண் ரோஷமும் விதண்டாவாதமும் கூடவே கூடாது. தர்க்கம் தவிர்த்தால், குதூகலம் கூடும். . வாழ்க்கைத் துணையுடன் மனம்விட்டுப் பேசுங்கள்.

வரவைப் போலவே செலவும் சேர்ந்து வரும், ஆடம்பரம் தவிர்த்து அசையாத சொத்தாகவோ சுபச்செலவாகவோ ஆக்குவது புத்திசாலித்தனம். வீடு, மனை பத்திரங்களை பத்திரமாக வைத்திருங்கள்.. சுபகாரியங்களை அவசரமில்லாமல் முழுமையாகத் திட்டமிட்டுச் செய்யுங்கள்.