முல்லைத்தீவில் இடம்பெற்ற விபத்தில் மூன்று இளைஞர்கள் படுகாயம்!!

19

முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு பொலிஸ்பிரிவிற்குட்பட்ட கைவேலி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூன்று இளைஞர்கள் காயமடைந்து வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்தானது இன்று(09.11.2026) மாலை இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் புதுக்குடியிருப்பு ஆடை உற்பத்தி நிலையத்தில் பணிபுரியும் இரு இளைஞர்களும், கைவேலி பகுதியைச் சேர்ந்த மற்றுமொரு இளைஞரும் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்த மூவரும் மேலதிக சிகிச்சைக்காக புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.