வவுனியாவில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது!!

173

வவுனியா வெளிவட்ட வீதியில் ஐஸ் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த இளைஞர் ஒருவர் வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின்போதே குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட இளைஞரிடமிருந்து ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

குறித்த கைது நடவடிக்கை உப பொலிஸ் பரிசோதகர் ஜெயக்கொடி தலைமையில், ரேவத சமந்த, மிதுசன், குமாரசிங்க சனத், சரித் ஆகியோரை கொண்ட பொலிஸ் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.