உள்ளாடைக்குள் வைத்து தங்கம் கடத்திய ஆசிரியை : விமான நிலைய அதிகாரிகள் அதிர்ச்சி!!

20

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேற்று அதிகாலை (12) 29 வயதான ஆசிரியை ஒருவர் உள்ளாடைக்குள் தங்க கட்டிகளை மறைத்து எடுத்து வந்த குற்றத்தில் அதிகாரிகாளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த ஆசிரியை சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டு வந்த, சுமார் 24.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்கக் கட்டிகளை எடுத்துக்கொண்டு விமான நிலையத்தை விட்டு வெளியேற முயன்றபோது பிடிபட்டார்.

கைதானவர் ஹோமாகமவைச் சேர்ந்த பெண் தனியார் பாடசாலை ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் UL 309 விமானம் மூலம் இலங்கையை வந்தடைந்திருந்தார்.

சோதனையின்போது, ​​அவரது உள்ளாடைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு சிறிய பைகளில், மொத்தம் 436 கிராம் எடையுள்ள நான்கு தங்கக் கட்டிகளும், மற்றொரு தங்கக் கட்டியின் ஒரு பகுதியும் கண்டெடுக்கப்பட்டன.

விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் குறித்த பெண்ணைக் கைது செய்து, தங்கத்தைப் பறிமுதல் செய்தனர்.

பின்னர், மேலதிக விசாரணைகளுக்காக அவர்கள் அந்தப் பெண்ணையும் தங்கத்தையும் விமான நிலைய சுங்கப் பிரிவின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவிடம் ஒப்படைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, அந்தத் தங்கக் கட்டிகள் அரசுடமையாக்கப்பட்டதுடன், சந்தேக நபருக்கு 2.5 மில்லியன் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.