
கொழும்பு – பாதுக்கைப் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த 20 வயது யுவதி ஒருவர், தனது அறையில் அசைவற்ற நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மதியம் பெற்றோர் வங்கித் தேவைக்காக வெளியே சென்றிருந்த வேளையில் இச்சம்பவம் நடந்துள்ளது. திரும்பி வந்து பார்த்தபோது மகள் படுக்கையில் அசைவற்ற நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பெற்றோர், உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோதும் , அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இச்சம்பவம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், பிரேதப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.
யுவதியின் மரணம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.





