உலகின் மிகச்சிறிய புத்தகத்தை உருவாக்கி உலக சாதனை படைத்த சகோதரர்கள்!!

407

கனடாவை சேர்ந்த இரு சகோதரர்கள் உலகிலேயே மிகச்சிறிய புத்தகம் ஒன்றை உருவாக்கி உலக சாதனை படைத்துள்ளனர்.

கனடாவில் உள்ள டூனிப் டவுன் என்ற பகுதியை சேர்ந்த மால்காம் டெளக்லஸ் சாப்லின், ரொபட் சாப்லின் என்ற இரண்டு சகோதரர்கள் கிரிஸ்டலைன் சிலிகான் (crystalline silicon) எனும் பொருளால் உலகின் மிகச்சிறிய புத்தகம் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

70 மைக்ரோ மீற்றர் அகலமும் 100 மைக்ரோ மீற்றர் நீளமும் கொண்ட இந்த புத்தகம் 30 பக்கங்கள் கொண்டுள்ளது.

இந்த சிறிய புத்தகத்தில் உள்ள எழுத்துக்களை நுண்ணோக்கியின் (Microscope) மூலமாக மட்டுமே பார்க்க முடியும். மேலும் மனிதனின் தலைமுடியை விட இந்த புத்தகத்தின் அகலம் குறைவு என்பது அதிசயமான ஓர் விடயம் ஆகும்.

இவர்களுடைய சாதனையை கின்னஸ் சாதனை நிறுவனம் ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு சான்றிதழை அளித்துள்ளது.

தற்போது பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள சைமன் பிரேஸர் பல்கலைக்கழகத்தில் உள்ள நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த புத்தகத்தை உருவாக்க இந்த சகோதரர்களுக்கு 15,000 டொலர்கள் செலவாகியது என்பது குறிப்பிடத்தக்கது.

B1 B2