வவுனியாவில் மரணத்திலும் இருவருக்கு மறுவாழ்வு கொடுத்த 21 வயது யுவதி : நெகிழ்ச்சி சம்பவம்!!

254

வவுனியா, சின்னப்பூவரசங்குளம் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய கவிராஜ் ரித்திகா என்ற யுவதி, பாம்பு தீண்டிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று (25.11.2026) உயிரிழந்தார்.

இந்நிலையில், துயரத்திலும் மனிதநேயத்தை வெளிப்படுத்திய அவரது குடும்பத்தினர், தமது முழுச் சம்மதத்துடன் யுவதியின் இரண்டு சிறுநீரகங்களையும் வவுனியா பொது வைத்தியசாலைக்கு தானமாக வழங்கியுள்ளனர்.

ஒரு உயிர் பிரிந்தாலும், இரண்டு உயிர்களுக்கு வாழ்வளிக்கும் நம்பிக்கையை விதைத்துச் சென்றுள்ளார் ரித்திகா.

இந்த உறுப்பு தானத்தின் மூலம் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட இருவருக்கு மறுவாழ்வு கிடைக்க வாய்ப்புள்ளதாக வைத்திய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

துயரத்தின் உச்சத்திலும் பிற உயிர்களைக் காப்பாற்ற முன்வந்த குடும்பத்தினரின் மனிதாபிமானம் அனைவரது மனங்களையும் நெகிழச் செய்துள்ளது.

உயிரிழந்த யுவதியின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திப்பதுடன், அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.