வவுனியாவில் தொடர்கதையாகிப்போன விபத்து மரணங்கள் : நெடுங்கேணியில் இடம்பெற்ற விபத்தில் 24 வயது இளைஞன் பலி!!

141

வவுனியா மாவட்டத்தில் வீதி விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகள் தொடர்கதையாகி வரும் நிலையில், நேற்றைய தினம் (27.11.2026) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 24 வயதுடைய இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

வவுனியா, பூந்தோட்டம் பெரியார்குளத்தைச் சேர்ந்த சதுர்சன் (வயது 24) என்ற இளைஞரே இவ்விபத்தில் உயிரிழந்தவராவார். நேற்றைய தினம் வவுனியா வடக்கு, நெடுங்கேணிக்கு அண்மித்த பகுதியில் அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்து உயிரிழந்துள்ளார்.

இளம் வயதில் ஏற்பட்ட இவரது திடீர் மரணம் குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நெடுங்கேணி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியாவில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் இவ்வாறான வீதி விபத்துக்களைத் தடுக்க சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்த வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.