மின்னல் தாக்கத்தில் மூன்று தமிழ் தோட்ட தொழிலாளர்கள் உட்பட 4 பேர் பலி!

520

Thunder

மாத்தறை தெனியாய கொஹிலதன்ன தேயிலை தோட்டத்தில் நேற்று இடம்பெற்ற மின்னல் தாக்கத்தில் மூன்று தமிழர்கள் உட்பட்ட நான்குபேர் பலியாகினர்.

தேயிலை தோட்டத்தில் கொழுந்து பறித்த பின்னர் மழைக்காக கூடாரம் ஒன்றில் தங்கியிருந்த வேளையில் கொழுந்து பறிப்பவர்களுக்கு மேற்பார்வையாளராக கடமையாற்றியவர் கையடக்க தொலைபேசியில் அழைப்பு ஒன்றை ஏற்படுத்தியுள்ளார்.

இதன் போது மின்னல் தாக்கம் ஏற்பட்டதால் அந்த இடத்தில் இருந்து இரண்டு பெண்கள் உட்பட்ட 4 பேர் கொல்லப்பட்டனர். அதில் மேற்பார்வையாளரும் அடங்குகிறார். மேலும் ஒருவர் காயங்களுக்கு உள்ளானார்.

மின்னல் தாக்கத்துக்கு பலியானவர்கள்- 40 வயதான மாரிமுத்து கணேசன், 25 வயதான கந்தசாமி வசந்தி, 35 வயதான சண்முகம் ஆரியவதி மற்றும் 37 வயதான அமிர்தரட்ன என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.