
யாழ்ப்பாணம், மாதகல் கடல் பகுதியில் 45 கிலோ நிறை தங்கத்துடன் இரண்டு இலங்கையர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த இருவரும் இன்று காலை கைதுசெய்யப்பட்டதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
எனினும் கைதுசெய்யப்பட்டவர்கள் யார் என்ற விடயம் இன்னும் வெளியாகவில்லை. ஏற்கனவே வடக்கு கடற்பரப்பில் வைத்து கடத்தல் தங்கம் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





