
இவர் யார், இவருக்கு என்ன தான் வேனும் என்று சில நாட்களாக சர்ச்சை உலகிலேயே இருந்து வருபவர் ராம்கோபால் வர்மா. இவர் இந்திய அளவில் சிறந்து இயக்குனர் என்று கூறினாலும், தமிழ் மக்கள் பலருக்கு இவரை யார் என்றே தெரியாது.
எப்போதும் தன் டுவிட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய கருத்துகளை பகிர்ந்து அனைவரையும் கோபப்படுத்துவார். இந்நிலையில் சமீபத்தில் இவரின் டுவிட் ஒன்று தமிழ் மக்களை மிகவும் காயப்படுத்தியுள்ளது.
இதில் ‘தற்போது தமிழகத்தின் தலைநகரமாக பெங்களூர் திகழ்வதையும், தமிழகத்தின் தலைமைச் செயலகமாக பரப்பன அக்ரஹாரம் விளங்குவதையும் நான் மிகவும் நேசிக்கிறேன். இந்தியா ஒன்றே என்பதற்கு இதுவே உச்சபட்ச சான்று’ என்று கிண்டலும், கேலியாக டுவிட் செய்துள்ளார்.
தமிழக முதல்வரை கைது செய்த காரணத்தால் தமிழகமே கவலையில் இருக்கும் போது, இவரின் டுவிட் தற்போது தமிழ் மக்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.





