மீனவரின் தாடியை வெட்டிய அமைச்சர்!!

797

rajitha

மீனவர் ஒருவரின் தாடியை அமைச்சர் ராஜித சேனாரத்ன வெட்டிய சம்பவமொன்று இன்று இடம்பெற்றுள்ளது. ஹிக்கடுவ, பெராலிய பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மீனவர்களுக்கான இறங்குதுறையொன்று நிர்மாணிக்கும் வரை தனது தாடியை வெட்ட மாட்டேன் என கடந்த 2005ம் ஆண்டு முதல் மீனவர் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், குறித்த பிரதேசத்தில் இறங்குதுறையொன்றை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, மீன்வளத்துறை அமைச்சர் ராஜித தலைமையில் இன்று நடைபெற்றது.

இதன்போது, குறித்த மீனவரை சந்தித்த அமைச்சர், இறங்குதுறை அமைப்பதான தனது உறுதியை நிறைவேற்றியதாக தெரிவித்ததுடன், தாடியை வெட்டுமாறு கோரியுள்ளார். இதனையடுத்து, குறித்த மீனவரின் தாடியை அமைச்சரே வெட்டி விட்டுள்ளார்.