பதக்கத்தை புறக்கணித்த இந்திய வீராங்கனைக்கு குவியும் பிரபலங்களின் ஆதரவு!!

431

Ind

ஆசிய குத்துச்சண்டையில் பதக்கம் வாங்க மறுத்ததிற்காக சர்வதேச குத்துச்சண்டை சங்கத்திற்கு சரிதா தேவி மன்னிப்பு கடிதம் அனுப்பியுள்ளார்.

60 கிலோ பிரிவின் அரையிறுதியில் இந்தியாவின் சரிதா தேவி தென்கொரிய வீராங்கனையிடம் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனால் அவர் அதிருப்தி அடைந்தார்.

வெண்கலம் வென்ற அவர் பதக்கத்தை கழுத்தில் அணியாமல் கைகளில் வாங்கி தென்கொரியா வீராங்கனை கழுத்தில் அணிவித்தார். இதுபெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன்பின் இந்திய அணி நிர்வாகம் சமரசத்தையடுத்து பதக்கத்தை மீண்டும் பெற்றார்.

அந்த போட்டியில் தோற்றுவிட்டாலும் சரிதா பலரின் இதங்களை கவர்ந்தார். இதன் காரணமாக நடிகர் அமிதா பச்சன் முதல் பல பிரபலங்கள் சரிதாவுக்கு டிவிட்டரில் தங்களின் ஆதரவுகளை தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து சரிதாவின் இந்த செயலுக்கு சர்வதேச குத்துச்சண்டை சங்கம் எதிர்ப்பு தெரிவித்து அவரது நடவடிக்கை வருத்தம் அளிப்பதாக அறிக்கை வெளியிட்டது.

இந்த நிலையில் சர்வதேச குத்துச்சண்டை சங்கத்திற்கு சரிதா தேவி மன்னிப்பு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாகவும், இச்செயலுக்காக வருத்தமும், எதிர்காலத்தில் இதுபோல் நடக்காமல் பார்த்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.