வவுனியா தமிழ் மாமன்றத்தின் “வன்னியின் வாதச்சமர் 2014” போட்டிகள் ஆரம்பம்!!

868

tamil

வவுனியா தமிழ் மாமன்றம் நடாத்துகின்ற ‘வன்னியின் வாதச்சமர் 2014’ எனும் மாபெரும் விவாதப் போட்டியின் வவுனியா மாவட்டத்திற்கான போட்டிகள் இன்று (04.10) ஆரம்பமாகின்றன.

சென்ற வருடம் வவுனியா மாவட்டத்திற்குள் மட்டும் நடாத்தப்பட்ட போட்டிகள் இவ் வருடம் வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கி இடம்பெறவிருக்கின்றது.

வவுனியா மாவட்ட பாடசாலைகள் பங்குபற்றும் போட்டி 04.10.2014 மற்றும் 05.10.2014 ஆகியதினங்களில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலத்தில் இடம் பெறவிருக்கின்றது.