கிளிமஞ்சாரோ மலை மீது ஏறி சாதனை படைத்த இந்தியச் சிறுமி!!

1049

kilimanjaro

ஆபிரிக்காவில் உள்ள உலகின் மிகப்பெரிய மலைகளில் ஒன்றான கிளிமஞ்சாரோ மலை மீது ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 12 வயது இந்திய சிறுமி ஏறி சாதனை படைத்துள்ளார்.

ஆபிரிக்காவின் தான்சானியா மாவட்டத்தில் மிக உயரமான மலையான 19 ஆயிரத்து 349 அடி கிளிமஞ்சாரோ மலை கடல் மட்டத்தில் இருந்து 5 ஆயிரத்து 891 மீட்டர் உயரத்தில் உள்ளது.

இந்நிலையில் காந்தி ஜெயந்தி அன்று இந்த மலையின் சிகரத்தில் ஜானவி என்ற 12 வயதான ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஆதிவாசி சிறுமி ஏறி சாதனை படைத்துள்ளார்.

மேலும், காந்தி ஜெயந்தி அன்று மலையின் உச்சியை அடைந்த அவர் அங்கு மகாத்மா காந்தியின் உருவ படத்துடன் இந்திய தேசிய கொடியை நட்டதோடு காந்தியின் கொள்கை வாசக பதாகைகளையும் வைத்துள்ளார்.