ஒரே படத்தில் இணையும் முன்னணி நட்சத்திரங்கள் : உண்மையை போட்டுடைத்த விஷால்!!

945

Act

விஷால்-ஸ்ருதி ஹாசன் நடித்த பூஜை திரைப்படம் தீபாவளி அன்று வெளிவரவிருக்கிறது. இப்படத்தின் இசை சமீபத்தில் வெளிவந்து அனைவரையும் கவர்ந்து வருகிறது.

இந்நிலையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில் விஷால் பேசுகையில் ‘என்னுடைய சினிமா வாழ்க்கையில், அதிக திரையரங்குகள் மற்றும் அதிக வியாபாரம் ஆனது பூஜை தான். அதற்கு எங்களுடைய கூட்டணி தான் காரணம். பண்டிகை நாட்களில், குடும்பத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து பார்ப்பது போன்று ‘பூஜை’ இருக்கும்.

அடுத்த ஆண்டு நடிகர் சங்க கட்டிடத்திற்காக ஆர்யா, ஜெயம் ரவி, ஜீவா, கார்த்தி மற்றும் நான் இணைந்து ஒரு படம் நடிக்க திட்டமிட்டு இருக்கிறோம். அதற்கான கதை மற்றும் இயக்குநர் என எதுவும் முடிவாகவில்லை என்று தெரிவித்துள்ளார்.