நாட்டின் பல பகுதிகளில் ஐஸ்கட்டி மழை!!

1256

ice rain

மொனராகலை மற்றும் பதுளையின் சில பிரதேசங்களில் நேற்று ஐஸ்கட்டி மழை பெய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

நேற்று நண்பகல் தியத்தலாவை பிரதேசத்தில் கடுமையான ஆலங்கட்டி மழையுடன் ஐஸ்கட்டிகள் விழுந்துள்ளதாக தேசிய இடர்முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

இதற்கிடையே நேற்று மாலை மொனராகலை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் கடுமையான ஐஸ்கட்டி மழை பெய்துள்ளது.

குறிப்பாக மொனராகலையின் மாளிகாவில, தம்பேகொட மற்றும் மொனராகலை நகரப் பகுதிகளில் இவ்வாறு ஐஸ்கட்டி மழை பொழிந்துள்ளது.