விமானத்தில் இயந்திர கோளாறு காரணமாக அவசரமாக தரையிறங்கிய ஸ்ரீலங்கன் விமானம்!!

555

Srilankan

இந்தியாவின் திருச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் அவசரமாக அதே விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக இவ்வாறு அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. எயார் பஸ் ரகத்தை சேர்ந்த ஏ 320 என்ற இந்த விமானம் நேற்று மாலை 4.15 அளவில் திருச்சி விமானநிலையத்தில் இருந்து 142 பேர் பயணிகளுடன் புறப்பட்டுள்ளது.

விமானம் புறப்பட்டு சுமார் 70 மைல் தூரம் வரை பயணித்த பின்னர் விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி அறிந்துள்ளார். இதனையடுத்து திருச்சி விமானநிலைய கட்டுப்பாட்டு அறைக்கு இது குறித்து அறிவித்த விமானி அவசரமாக விமானத்தை தரையிறக்கியுள்ளார்.