பாடசாலை மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த வெளிநாட்டவர் கைது!!

557

Abuse

பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் ஸ்கொட்லாந்து பிரஜை ஒருவரை கைது செய்துள்ளனர். சந்தேக நபர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹட்டன் பிரதேசத்தில் வசித்து வரும் இந்த நபர் சிங்கள பெண்ணொருவரை மணமுடித்துள்ளார். சந்தேக நபர் நேற்று உறவினரான பாடசாலை மாணவியுடன் பல் சிகிச்சை நிலையம் ஒன்றுக்கு சென்றுள்ளார். இதன் போதே அவர் இந்த குற்றச் செயலில் ஈடுபட முயற்சித்துள்ளார்.

பல் சிகிச்சை நிலையத்தில் இருந்தவர்கள் ஹட்டன் பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்ததை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

55 வயதான இந்த சந்தேக நபர் மனநோயாளி எனக் கூறி அவரது உறவினர்கள் மருத்துவச் சான்றிதழ் ஒன்றை பொலிஸாரிடம் வழங்கியுள்ளனர்.