தணிக்கைக் குழுவினரால் பாராட்டப்பட்ட யாழ் திரைப்படம்!!

465

Yarl

மிஸ்டிக் பிலிம்ஸ் சார்பாக அவுஸ்திரேலியா வாழ் தமிழர் எம்.எஸ்.ஆனந்த் தயாரிக்கும் படம் யாழ். இந்த படத்தில் வினோத், டேனியல் பாலாஜி, சசி ஆகியோர் கதாநாயகர்களாகவும், கதாநாயகிகளாக லீமா, நீலிமா, மிஷா ஆகியோரும் நடிக்கிறார்கள்.

சமீபத்தில் இப்படம் தணிக்கை குழுவினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தணிக்கை குழுவினர் படத்தை பார்த்து பாராட்டியுள்ளனர். அதோடு ஒரு கட் கூட செய்யாமல் படத்திற்கு U சான்றிதழ் அளித்துள்ளனர்.மேலும் இப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளதாக படக்குழுவினர் கூறியுள்ளனர்.