மகிந்த ராஜபக்சவுக்கு பாரத ரத்னா விருது வழங்க மோடிக்கு சுப்பிரமணியன் சுவாமி கோரிக்கை!!

522

Rajapaksha

இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்,

விடுதலைப் புலிகள் அமைப்பை அழித்ததன் மூலம் இந்தியாவின் பாதுகாப்புக்கு மகிந்த ராஜபக்ச பங்காற்றியுள்ளார். எனவே, அவருக்கு பாரத் ரத்னா விருது வழங்கி இந்தியா கௌரவிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

மேலும், நான் எழுதிய கடிதம் பிரதமர் மோடிக்கு கிடைத்து விட்டதாக அவரது தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.