கிளிநொச்சி விபத்தில் இரண்டரை வயதுச் சிறுவன் பலி!!

752

Accident

கிளிநொச்சி – இராமநாதபுரம் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டரை வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை மீறி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் மற்றும் அவரது மகனும் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது, சிறுவன் பலியாகியுள்ளார்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.