கனேடிய நாடாளுமன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு ஜனாதிபதி கண்டனம்!!

312

canada

கனேடிய நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு ஜனாதிபதி மஹிந்த ராபஜக்ச கண்டனம் வெளியிட்டுள்ளார்.

டுவிட்டர் ஊடாக ஜனாதிபதி இந்த கண்டனத்தை வெளியிட்டுள்ளார். பல நாடுகளிலும் உள்ள பயங்கரவாதம், இப்போது கனடாவிலும் அதன் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. உலகில் பயங்கதவாத நடவடிக்கைகள் அதிகரித்துச் செல்வது அதிருப்தி அளிக்கின்றது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இலங்கை மனித உரிமை நிலைமைகள் குறித்து கனேடிய பிரதமர் ஸ்டீவன் ஹார்பர் உள்ளிட்ட கனேடிய அரசியல்வாதிகள் கேள்வி எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பொதுபல நாடுகள் தலைவர்கள் மாநாட்டினை பிரதமர் ஹார்பர் புறக்கணித்திருந்தார்.

இலங்கை அரசாங்கம் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் காத்திரமான தீர்மானம் எடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்திருந்தார்.
இவ்வாறான ஓர் பின்னணியில் கனேடிய நாடாளுமன்றம் மீது நடத்தப்பட்ட தாக்குதலை ஜனாதிபதி கண்டித்துள்ளார்.