வவுனியா கோவில்குளம் சிவன் கோவிலில், கொஸ்லந்தையில் மரணித்த மக்களுக்காய் விசேட பூஜை நிகழ்வுகள்!!

462

வவுனியா மாவட்ட ஊடகவியலாளர்கள், கோவில்குளம் சிவன் கோவில் நிர்வாகம், தமிழ் விருட்சம், மற்றும் கோவில்குளம் இளைஞர் கழகத்தினரும் இணைந்து, மண்சரிவில் உயிர் நீத்த எமது உறவுகளுக்காய் ஓர் அஞ்சலி நிகழ்வு நேற்று (06.11) மதியம் 12.00 மணியளவில் கோவில்குளம் சிவன் கோவிலில் நடைபெற்றது.

உயிர் நீத்த மக்களின் ஆத்மா சாந்திக்கான இவ் பிரார்த்தனை நிகழ்வில் வட மாகாண சபை உறுப்பினர் திரு ஜி.ரி.லிங்கநாதன் (விசு), நகர சபையின் செயலாளர் திரு சத்தியசீலன், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதா திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்), மூத்த ஊடகவியலாளர் திரு மாணிக்கவாசகம், வரியிறுப்பாளர் சங்கத்தின் தலைவர் திரு சந்திரகுமார்(கண்ணன்), மக்கள் வங்கியின் நகர கிளையின் முகாமையாளர் திரு றோய் ஜெயக்குமார், கண்ணகி தேவராஜா ஆகியோருடன் பல சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

IMG_3278 IMG_3287 IMG_3288 IMG_3289 IMG_3291 IMG_3294 IMG_3305 IMG_3309 IMG_3321 IMG_3333 IMG_3335 IMG_3342