100,000க்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள் தமிழகத்தில் : இந்திய உள்துறை அமைச்சு!!

541

Ref

100,000க்கும் மேற்பட்ட இலங்கை தமிழ் அகதிகள் தமிழ் நாட்டிலுள்ளதாகவும், அவர்களில் பெரும்பாலானவர்கள் பொலிஸ் பதிவுகளை மேற்கொள்ளாமல் தங்கியிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

உள்நாட்டு யுத்தம் காரணமாக 1983 தொடக்கம் 2012ம் ஆண்டு காலப்பகுதி வரை, பல்வேறு கட்டங்களாக மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்தியாவுக்குள் நுழைந்ததாக, அந்நாட்டின் உள்நாட்டலுவல்கள் அமைச்சை மேற்கோள்காட்டி இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அவர்களில் 1995ம் ஆண்டு வரை 99,469 பேர் திருப்பியனுப்பப்பட்ட போது, சில அகதிகள் வேறு நாடுகளுக்கு தாங்களாகவே சென்று விட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

2014 பெப்ரவரி மாத தகவல்களின் படி 113 முகாம்களில், 65,570 அகதிகள் தமிழகத்தில் தங்கியுள்ளதாவும், பொலிஸ் பதிவுகளின் பின்னர் 34788 பேர் முகாம்களுக்கு வெளியே தங்கியுள்ளதாகவும் இந்திய ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.