வவுனியாவில் புகையிரத கடவையை மோதித்தள்ளி புகையிரதம் முன்பு பாய்ந்த முச்சக்கரவண்டி!!

650

வவுனியா ஸ்ரேசன் வீதியில் உள்ள புகையிரத கடவையின் பாதுகாப்பு கடவையை மோதித் தள்ளியவாறு புகையிரதம் முன் பாய்ந்த ஆட்டோ சாரதி மயிரிழையில் உயிர் தப்பிய சம்பவம் நேற்று (11.11) மாலை இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நேற்று மாலை கொழும்பில் இருந்து யாழ் நோக்கி புகையிரதம் பயணித்துக் கொண்டிருந்த போது வவுனியா வைரவபுளியங்குளம், ஸ்ரேசன் வீதியில் உள்ள புகையிரதக் கடவை மூடப்பட்டுள்ளது. இதன் போது அவ் வீதி வழியாக வவுனியா நகர் நோக்கி பயணித்த ஆட்டோ வேகக் கட்டுப்பாட்டை இழந்து பாதுகாப்பு கடவையை உடைத்து கொண்டு தண்டவாளத்தில் போய் நின்றது.

இந் நிலையில் புகையிரத சாரதி ரயிலை நிறுத்தியதால் தெய்வாதீனமாக சாரதி தப்பினார். இச் சம்பத்தினால் பாதுகாப்பு கடவை மற்றும் ஆட்டோ என்பன சேதமடைந்துள்ளன.

-பாஸ்கரன் கதீசன்-



1 2 3 4 10808209_297685783758077_2041943285_n