க.பொ.த சா/த மாணவர்களுக்கு தே.அ. அட்டை விநியோகிக்க விசேட திட்டம்!!

626

Ic

எதிர்வரும் க.பொ.த சா/த பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை விநியோகிக்க விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நவம்பர் 22 மற்றும் 29ம் திகதிகள் விசேட தினமாக அறிவிக்கப்பட்டு அன்றைய தினம் தேசிய அடையாள அட்டை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் நாயகம் சரத்குமார தெரிவித்தார்.