நிறைவேறாமல் போன பிலிப் ஹியூக்ஸூன் ஆசை!!

496

philip

சீன் அப்போட் என்ற பந்துவீச்சாளரின் பவுன்சர் பந்தில் அடிபட்ட அவுஸ்திரேலிய துடுப்பாட்டக்காரர் ஹியூக்ஸ் பரிதாபமாக உயிரிழந்தார்.

இவர் இதுவரை 26 டெஸ்டில் விளையாடி 3 சதம், 7 அரைசதம் உள்பட 1,535 ஓட்டங்களும், 25 ஒரு நாள் போட்டிகளில் 2 சதம், 4 அரைசதத்துடன் 826 ஓட்டங்களும், டி20 போட்டியில் ஒன்றில் ஆடி 6 ஓட்டங்களும் எடுத்துள்ளார்.

இதே போல் முதல்தர கிரிக்கெட் போட்டியில் 114 ஆட்டங்களில் 26 சதத்துடன் 9,023 ஓட்டங்கள் குவித்துள்ளார்.



25 வயதான பிலிப் ஹியூக்ஸ் 1988ம் ஆண்டு நவம்பர் 30ம் திகதி அவுஸ்திரேலியாவின் மாக்ஸ்வில்லே என்ற சிறிய நகரத்தில் பிறந்தார். அங்கு அவரது தந்தை கிரேக், வாழை தோட்டம் வைத்து உற்பத்தி செய்து வருகிறார்.

தனது தந்தையின் வாழைப்பண்ணைக்கு ஹியூக்ஸ் அடிக்கடி செல்வார். அப்போதெல்லாம் அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு தந்தையின் வாழைத்தோட்டத்துடன், பெரிய மாட்டுப்பண்ணையும் வைக்க ஆசைப்படுவதாகவும், அதுவே தனது கனவு என்றும் கூறுவார். ஆனால் விதி அவரது வாழ்க்கையில் வேறு விதமாக விளையாடி விட்டது.

ஹியூக்ஸ் எப்போதும் பவுன்சர் எனப்படும் எகிறி வரும் பந்துகளை சமாளிப்பதில் தடுமாறுவது உண்டு.

தொடர்ந்து பவுன்சர் பந்து வீச்சுக்கு திணறியதால் ஒரு முறை ஆஷஸ் தொடரில் இருந்தும் கழற்றி விடப்பட்டார். கடைசியில் அப்படிப்பட்ட ஒரு பவுன்சர் பந்தே அவரது உயிரை பறித்து விட்டது.