திருமணம் செய்வதாக கூறி நடிகையை பலாத்காரம் செய்த நடிகர் கைது!!

406

Act

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி நடிகையை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய பிரபல நடிகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மணீத் மித்தா என்கிற அஹ்வான் குமார் இந்தி மற்றும் தெலுங்கு தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கும் நடிகர். இவர் மீது சகநடிகை ஒருவர், மும்பையில் அந்தேரி பகுதியில் உள்ள ஓசிவாரா பொலிசில் கற்பழிப்பு புகார் ஒன்றை அளித்தார்.

அந்த புகாரில், மணீத் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி கற்பழித்துவிட்டார் என்றும் தான் கர்ப்பம் அடைந்து அதை கலைத்து விட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.



இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பொலிசார் பின்னர் மணீத்தை கைது செய்து விசாரித்துள்ளனர். பொலிஸ் விசாரணையில், மணீத் நிறைய பெண்களை இதுபோல் ஏமாற்றி இருப்பது தெரியவந்துள்ளது.

பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், மணீத் நிறைய பெண்களுடன் தொடர்பு வைத்து இருந்தது தெரிய வந்துள்ளது.
மேலும், எல்லோரிடமும் திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்துள்ளார் என்றும் கற்பழிப்பு குற்றங்களிலும் ஈடுபட்டு உள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.