10 லட்சம் நாணயங்களால் செய்த பிரமிட் : உலக சாதனை படைத்த வாலிபர்!!

507

pyramid

லித்வேனியா நாட்டு வாலிபர் ஒருவர் 10 லட்சம் லிட்டாஸ் நாணயங்களை வைத்து பிரமிட் அமைத்து உலக சாதனை படைத்துள்ளார்.

லித்வேனியாவில் வரும் ஜனவரி 1ம் திகதி முதல் யூரோ பயன்படுத்தப்பட உள்ளதால், அந்நாட்டின் நாணயமான லிட்டாஸ் இனிமேல் பயன்படுத்தப்படமாட்டாது.

இந்நிலையில் 26 வயது வாலிபர் டாமஸ் ஜோகுபாவ்ஸ்கிஸ், தமது நாட்டின் பணம் உலக அளவில் நினைவில் இருக்க வேண்டும் என்று லிட்டாஸ் நாணயங்களை கொண்டு பெரிய பிரமிட்டை உருவாக்க எண்ணியுள்ளார்.



இதற்காக ஒரு மில்லியன் நாணயங்களை சேகரித்து ஒருவாரம் செலவழித்து 1 மீட்டர் உயரமுள்ள பிரமிட்டை உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இதற்கு முன்னதாக 6 லட்சம் நாணயங்களை கொண்டு பிரமிட் உருவாக்கப்பட்டது உலக சாதனையாக இருந்தது.

மேலும், அதனை நாங்கள் எப்படியும் முறியடித்து விடுவோம் என்று உறுதியாக இந்த முயற்சியை எடுத்து 10 லட்சம் நாணயங்களை வைத்து உருவாக்கினோம் என்று தெரிவித்துள்ளார்.