அவுஸ்திரேலிய வீரர் ஹியூக்ஸ் அந்நாட்டில் நடந்த முதல்தர போட்டியில் பந்து தாக்கி மரணம் அடைந்தார். சிட்னியில் கடந்த 25ம் திகதி நடந்த உள்ளூர் போட்டியில் சியான் அபோட் வீசிய பவுன்சர் பந்து அவரது தலையில் பலமாக தாக்கியது. மூளையில் ஏற்பட்ட ரத்த கசிவால் அவர் நினைவு திரும்பாமலேயே கடந்த 27ம் திகதி மரணம் அடைந்தார்.
ஹியூக்ஸ் மரணம் கிரிக்கெட் உலகையே மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அவரது இறுதி சடங்கு சொந்த ஊரான மேக்ஸ்வெல்லில் நாளை நடக்கிறது. இதில் அவுஸ்திரேலிய வீரர்கள், கிரிக்கெட் சபை நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.
இந்திய அணியின் தற்காலிக தலைவர் வீராட் கோலி, பயிற்சியாளர் பிளட்சர், அணி இயக்குனர், ரவிசாஸ்திரி மற்றும் 4 வீரர்கள் இறுதி சடங்கில் கலந்து கொள்கிறார்கள். ஹியூக்ஸ் இறுதிச்சடங்கு நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.