யாழில் காற்பந்தாட்ட தொழில்நுட்ப பயிற்சி நிலையம் திறந்து வைப்பு!!

369

யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்டு வந்த யாழ் காற்பந்தாட்ட தொழில்நுட்ப பயிற்சி நிலையம் மற்றும் மைதானம் நேற்று திறந்து வைக்கப்பட்டது.

இதற்கான நிதியுதவி சர்வதேச உதைபந்தாட்ட சம்மேளனம் மற்றும் ஜேர்மன் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டிருந்தது. செலவிடப்பட்ட தொகை 100 மில்லியன் ரூபாவாகும்.

யாழ்ப்பாணம் அரியாலையில் அமைந்துள்ள இந்த மைதானத்தினை சர்வதேச உதைபந்தாட்ட சம்மேளன தலைவர் ஜோசவ் செப் பிளட்டர் அவர்கள் உத்தியோக பூர்வமாக திறந்து வைத்தார்.

வடமாகாணத்தில் காற்பந்து விளையாட்டினை ஊக்குவிக்கும் நோக்கில் சர்வதேச உதைபந்தாட்ட சம்மேளனம் மற்றும் ஜேர்மன் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் இந்த அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.



இந்நிகழ்வில் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளன தலைவர் றஞ்சித் ரொட்ரிக்கோ, விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்த அளுத்கமேக, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இலங்கைக்கான ஜேர்மன் உயர்ஸ்தானிகர் ஜுர்ஜன் மொர்ஹாட்டி, மற்றும் மாகாண அமைச்சர்கள் அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

1 2 3 4 5 6