ஐந்து விக்கெட்டுக்களால் இங்கிலாந்து அணி வெற்றி!!

380

eng

இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஐந்து விக்கெட்டுக்களால் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றுள்ளது.

நேற்று ஹம்பாந்தோட்டை சூரியவெவ மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

போட்டி ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே மழை குறுக்கிட்டதால் தடங்கள் ஏற்பட்டது.
பின்னர் 50 ஓவர்கள் 35 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்ட நிலையில், இலங்கை அணி 8 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 242 ஓட்டங்களை எடுத்தது.



இலங்கை அணி சார்பாக குமார்சங்கக்கார 63 ஓட்டங்களையும் லகிரி திருமானே ஆட்டமிழக்காமல் 62 ஓட்டங்களையும் விளாசினர்.

இதனையடுத்து சீரற்ற காலநிலை காரணமாக இங்கிலாந்துக்கு 236 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இலக்கைத் துரத்திய இங்கிலாந்து அணி 33.4 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுக்களை இழந்து 236 ஓட்டங்களை விளாசி வெற்றிவாகை சூடியது.

இதன்படி ஏழுபோட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-1 என இலங்கை முன்னிலையில் உள்ளது.