அவுஸ்ரேலியா வீசாக்களில் புதிய மாற்றங்கள்!!

460

Australian Visa

தற்காலிக பாதுகாப்பு வீசாவை (Temporary Protection Visa) மீண்டும் அறிமுகம் செய்யும் சட்டம் செனட்டில் வெற்றிபெறும் வகையில் அரசு முன்பு முன்வைத்த சட்டமூலத்தில் சில மாற்றங்கள் செய்துள்ளன என்று அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், செனட் அவை இந்த புதிய மாற்றத்தை ஏற்றால் வேலைசெய்ய உரிமை மறுக்கப்பட்ட புகலிட கோரிக்கையாளர்கள் வேலை செய்ய அனுமதிக்கப்படுவர் உள்ளிட்ட பல சலுகைகளை வழங்க அரசு தயார் எனவும் அவர் தெரிவித்தார்.

நேற்று பாராளுமன்றத்தில் நடந்த சூடான விவாதத்தினை அடுத்து இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.



இதன் அடிப்படையில் வருகின்ற நத்தார் பெருநாளுக்கு முன்பதாக இந்த பிரேரணை வெற்றி பெற்றால் தற்போது அடிமை விசாவில் உள்ள அனைவருக்கும் தொழில் செய்யும் உரிமை வழங்கப்படும்.

மனிதநேய அடிப்படியில் புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றுக்கொள்ளப்படும் என பல முக்கியமான விடயங்களை உள்ளடக்கி உள்ளதால் இந்த சட்ட மூலம் செனட் சபையில் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பல வருடங்களாக தங்களது அகதி கோரிக்கைகளுக்காக காத்திருக்கும் புகலிடக் கோரிக்கையாளர்களின் விண்ணப்பங்கள் துரிதப்படுத்தப்படும் எனவும் மொரிசன் தெரிவித்துள்ளார்.

படகில் வந்த புகலிடக் கோரிக்கையாளர்களுக்கும் நிரந்தர பாதுகாப்பு வீசாவினை பெற்றுக் கொள்ளவும் இந்த சட்டம் வகை செய்யும் என தெரிவித்துள்ளார்.

தற்போது நிலுவையில் உள்ள 30 ஆயிரம் புகலிடக் கோரிக்கையாளர்களின் விண்ணப்பப்படிவங்களும் 3 வருடத்துக்குள் பரிசீலிக்கப்படும் எனவும் கோரியுள்ளார்.

நேற்று நடந்த குறுக்கு மேசை செனட் அமர்வுகளின் போது நடந்த விவாதத்தினை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இந்த மசோதா பற்றி தெரிவிக்கையில் தான் திருப்த்தி அடைந்துள்ளதாக மொரிசன் தெரிவித்துள்ளார்.

இதனுள் பாமர் கட்சியுடன் ஒத்துக் கொண்டவைகளும் இச் சட்ட மாற்றத்தில் உள்ளடங்கியுள்ளது. 2013 யூலை 19 முதல் 2013 யூலை 31ம் திகதிக்குள் வந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் நவ்ரு தீவுக்கு அனுப்பி வைக்கப்பட மாட்டார்கள். அவர்களின் கோரிக்கைகளும் அவுஸ்திரேலியாவில் பரிசீலிக்கப்படும்.

இதன் காரணமாக 100 க்கு அதிகமான சிறுவர்களும் விடுவிக்கப்படப்படும் எனவும், சிலர் நத்தார் பெருநாளுக்கு முன்னரே விடுவிக்கப்படலாம் எனவும் மொரிசன் தெரிவித்துள்ளார்.

சில குறிப்பிட்ட பிரதேசங்களில் சென்று தொழில் செய்ய படிக்க விரும்பும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு புதிதாக அறிமுகப்படுத்த உள்ள 5 வருட சேப் கெவன் என்று அழைக்கப்படும் வீசா வழங்கப்படும். அது போன்று அவர்கள் ஒரு பாதுகாப்பு வீசாவுக்கும் விண்ணப்பிக்க முடியும் என்று மொரிசன் தெரிவித்துள்ளார்.

தற்காலிக பாதுகாப்பு வீசா மீண்டும் வந்தால் சமுதாயத்தில் தற்போது அடிமை வீசாவில் உள்ள 25000 புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு தொழில் செய்யும் அனுமதியும் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

அடுத்து இடம்பெறவுள்ள 2 வஜட்டிலும் லேபர் அரசாங்கம் அகதிகளை உள்வாங்கியத்தை விட கூடுதல் அகதிகளையும் உள்வங்குவதற்கு ஓப்புக் கொண்டுள்ளார்.

மற்றைய செனட் சபை அங்கத்தவர்கள் இந்த புதிய வீசா நடைமுறையில் திருப்பதி இல்லை இருந்தாலும் தற்போது உள்ள சூழ்நிலையை மனதில் கொண்டு இந்த மசோதாவுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளனர்.

ஆனாலும் இந்த சட்ட மூலம் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இருந்த போதும் ஒரு சில செனட்டர்கள் இந்த சட்ட மூலத்துக்கு எதிராகவும் வாக்களித்துள்ளனர்.

எது நடந்தாலும் தற்போது புகலிடக் கோரிக்கையாளர்களின் நலன் கருதி அடிமை வீசாவுக்கு ஒரு முற்றுப்புள்ளி அனைவருக்கும் ஏதோ ஒரு வீசா வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3 ஆண்டுகள் கடந்தும் எந்தவிதமான நன்மைகளும் இன்றி வீசாக்கள் காலாவதியகிய நிலையில் அனைத்து புகலிடக் கோரிக்கையாளர்களும் உள்ளனர். அது போன்று இவர்களை வைத்து கொள்ளை லாபம் தேடும் சில வர்த்தகர்களுக்கு சிறந்த பாடம் படிப்பிக்க வேண்டும்.

இவ்வளவு தூரம் மொரிசன் தனது தோல்வியை கருத்தில் கொண்டு தற்போது சிறிதளவு ஆறுதல் தரக் கூடிய அளவுக்கு பணிந்து வந்துள்ளமை புகலிடக் கோரிக்கையளார்களுக்கு வெள்ளை இனத்தை சேர்ந்த அகதி ஆவலர்களுக்கு கிடைத்த சிறிய வெற்றி.