தந்தையை அடித்தே கொன்ற மகள்!!

564

Murder

ஹொரண – கய்காவல – கனன்வில பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

மகளால் தாக்கப்பட்ட நிலையில் தந்தை ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இவர் கய்காவல பகுதியைச் சேர்ந்த 66 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.

தந்தைக்கும் மகளுக்கும் இடையிலான முரண்பாடே கொலைக்குக் காரணம் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலும் குறித்த பெண் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, ஹொரண பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.