ஊழல் தொடர்பான பட்டியலில் இலங்கைக்கு 85ம் இடம்!!

557

SL

டிரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பினால் விடுக்கப்பட்டுள்ள சர்வதேச ஊழல் தொடர்பான சுட்டெண் பட்டியலில் இலங்கை கடந்த வருடத்தை விட சற்று முன்னேற்றத்தை எட்டியுள்ளது.

இதன்படி 175 நாடுகளில் 85ம் இடத்தினை இலங்கை பிடித்துள்ளது. கடந்த வருடம் இந்த பட்டியலில் இலங்கை 91 ஆம் இடத்தில் இலங்கை இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இந்தப் பட்டியலில் 92 புள்ளிகளைப் பெற்று ஊழல் குறைந்த நாடாக டென்மார்க் பதிவாகியுள்ளது.

மேலும் ஊழல் தொடர்பான சுட்டெண் பட்டியலில் வட கொரியா மற்றும் சோமாலியா ஆகிய நாடுகள் அதிக ஊழல் இடம்பெறும் நாடுகளாக திகழ்கின்றன.