வவுனியாவில் இருந்து முல்லைத்தீவு செல்லும் பஸ்ஸினால் பயணிகள் முகங்கொடுக்கும் சிரமங்கள்!!

545

bus

வவுனியாவில் இருந்து தினசரி காலை 6.30 மணியளவில் நெடுங்கேணி ஊடாக முல்லைத்தீவு செல்லும் இலங்கை போக்குவரத்துச்சபைக்கு சொந்தமான பஸ் வண்டியில் அரச உத்தியோகத்தர்கள், வங்கி உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள் பயணம் செய்கின்றனர்.

இவ் பஸ் வண்டி சிறியதாக காணப்படுவதனால் . உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள், முதியோர் இவ் பஸ் வண்டியில் பயணம் செய்ய முடியாத நிலையில் காணப்படுகிறது .
சில வேலைகளில் பயணிகளை ஏற்றாமல் செல்லுகின்றது.

இது தொடர்பாக நடத்துனரை விணவிய போது இவ் பஸ் வண்டியில் அதிகளவான பயணிகள் இருப்பதால் இதற்கு மேலும் பயணிகள் ஏறுவதற்கு பஸ் வண்டியில் இடமில்லை என கருத்து தெரிவித்தார்.

இது தொடர்பாக வங்கி உத்தியோகத்தர் ஒருவர் கூறுகையில், இவ் பஸ் வண்டியில் எனது பையைக்கூட கொண்டு செல்ல முடியாத அளவிற்கு பயணிகள் ஏறுகின்றனர். இதணை நிவர்த்தி செய்வதற்கு பெரிய பஸ் வண்டியினை இவ் போக்குவரத்து சேவைக்கு வழங்குமாறு பயணிகள் கோரிக்கை தெரிவித்தனர்.

இலங்கை போக்குவரத்து சபை ( வவுனியா சாலை) இது உங்களின் கவனத்திற்கு..

-பாஸ்கரன் கதீஸன்-