மேலும் ஒரு தொகை தங்கம் உரியவர்களிடம் ஒப்படைப்பு!!

559

Gold

வடமாகாண வங்கிகளில் இருந்து கைப்பற்றப்பட்ட மற்றுமொரு தொகை தங்கம் இராணுவத்தினரால் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று அலரிமாளிகையில் வைத்து இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

மன்னாரில் இருந்து 223 பேரும், வவுனியாவில் இருந்து 319 பேரும், யாழ்ப்பாணத்தில் இருந்து 45 பேரும் கிளிநொச்சியில் இருந்து 1187 பேரும், முல்லைத்தீவில் இருந்து 186 பேரும் இனம்காணப்பட்டு மொத்தமாக 1960 பேருக்கு அவர்களது பொருட்கள் கையளிக்கப்பட்டுள்ளன.