வவுனியா வேப்பங்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் மூவர் காயம்!!

548

வவுனியா மன்னார் வீதி வேப்பங்குளத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது..

வவுனியா வேப்பங்குளத்தில் முச்சக்கரவண்டி ஒன்று திரும்பிச் செல்ல முற்பட்ட போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் முச்சக்கரவண்டி மீது மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இதனால் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முச்சகரவண்டியின் முன்பகுதி முழுமையாக சேதமடைந்துள்ளது. வவுனியா பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

auto