சச்சின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் சங்கக்கார!!

392

Sangakara

 

சர்வதேச ஒருநாள் போட்டியில் அதிக அரைச்சதம் எடுத்த சச்சினின் சாதனையை சங்கக்கார நெருங்கிவிட்டார். இலங்கை அணியின் நட்சத்திர ஆட்டக்காரராக இருக்கும் சங்கக்கார, களமிறங்கிய அனைத்து போட்டிகளிலும் தன் அசத்தல் திறமையை காட்டி வருகிறார். பல சாதனைகளையும் குவித்து வருகிறார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் 13000 ஓட்டங்கள் என்ற மைல்கல்லை எட்டிய சங்கக்காரா, அடுத்து இந்திய அணியின் முன்னாள் ஜம்பவான் சச்சினின் அதிக அரைச்சதம் என்ற சாதனையை முறியடிக்க காத்திருக்கிறார்.



452 இன்னிங்ஸில் விளையாடியுள்ள சச்சின் 96 அரைச்சதம் அடித்துள்ளார். ஆனால் 386 இன்னிங்ஸ் விளையாடியுள்ள சங்கக்கார இப்போழுதே 89 அரைச்சதம் கடந்து விட்டார்.

சச்சினின் சாதனையை முறியடிக்க இன்னும் 8 அரைச்சதங்கள் மட்டுமே உள்ளது. உலகக்கிண்ணப் போட்டிகளுக்கு முன் இலங்கை குறைந்தது 15 போட்டிகளில் விளையாடும். இதனால் சச்சின் சாதனை சங்கக்காராவால் முறியடிக்கப்படும் என நம்பப்படுகின்றது.

கலிஸ் (86), டிராவிட் (83), இன்சமாம் (83), பொண்டிங் (82), ஜெயவர்த்தன (76), கங்குலி (72), ஜெயசூரிய (68), முகமது யூசுப் (64) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றனர்.