80 வயது மூதாட்டியை நிர்வாணமாக்கி கழுதையில் ஊர்வலமாக அழைத்து வந்த ஊர் மக்கள்!!

463

Capture

ராஜஸ்தானில் கட்டப்பஞ்சாயத்து உத்தரவின்படி 80 வயது மூதாட்டி ஒருவர் நிர்வாணமாக்கப்பட்டு கழுதை மேல் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டம், சவ்ஹானோன் கி கேமெரி கிராமத்தில் கடந்த வாரம் 80 வயது மூதாட்டி ஒருவர் நிர்வாணமாக்கப்பட்டு கழுதை மேல் ஊர்வலம் வரச்செய்யப்பட்டுள்ளார்.

80 வயதான மூதாட்டி குழந்தைகளை கொன்று திண்ணும் சூனியக்காரி என்று பஞ்சாயத்தில் கூறப்பட்டுள்ளது.



பின்னர் கட்டப்பஞ்சாயத்து நடத்தியவர்கள், மூதாட்டியை ஆடைகளை களையவைத்து, முகத்தில் கருப்பு வர்ணத்தை ஊற்றி, நிர்வாணமாக கழுதை மேல் ஏற்றி ஊரை சுற்றிவர செய்துள்ளனர்.

கட்டப்பஞ்சாயத்தில் மூதாட்டி ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார். அவரிடம் யாராவது பேசினால் 1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான தகவல்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் 37 வருடங்களுக்கு முன்னதாக இறந்துவிட்டார். அவருக்கு குழந்தைகள் எதுவும் இல்லை.

ஆனால் பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு கிராமத்தில் சிறிய அளவில் நிலம் உள்ளது. இந்த நிலத்தை அபகரிக்கும் நோக்கில் என்னை அவமானப்படுத்தியுள்ளனர் என்று மூதாட்டி தெரிவித்துள்ளார்.