புதிய மைல்கல்லை எட்டிய சங்கக்கார, ஜெயவர்த்தன ஜோடி!!

456

Jayawardene-with-Sangakkara

இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி6 விக்கட்டுகளால் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியின் 266 ஓட்டங்கள் இலக்கை நோக்கி இலங்கை அணி துடுப்பெடுத்தாடியது. இதில் ஜெயவர்த்தன, சங்கக்கார ஜோடி அசத்தலாக ஓட்டங்கள் சேர்த்தது.

சங்கக்கார 86 ஓட்டங்களும், ஜெயவர்த்தன 44 ஓட்டங்களும் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவியாய் இருந்தனர்.

இந்தப் போட்டியில் சங்கக்கார இந்த ஆண்டு ஆயிரம் ஓட்டங்கள் கடந்த 3வது வீரர் என்ற பெருமையை பெற்றார். இவர் இந்த வருடம் 1020 ஓட்டங்களை குவித்துள்ளார்.

ஏற்கனவே கோஹ்லி (1054), மத்யூஸ் (1183) ஆயிரம் ஓட்டங்களை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் 2011 (1127 ஓட்டங்கள்), 2012 (1184), 2013 (1201), 2014 (1020) என தொடர்ந்து 4வது முறையாக ஆயிரம் ஓட்டங்களை கடந்து சங்கக்கார அசத்தியுள்ளார்.

அதேபோல் ஜெயவர்த்தனவும் நேற்றைய போட்டியில் ஒரு புதிய மைல்கல்லை எட்டினார்.

இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் விவ் ரிச்சர்ட்ஸ் (1619), ரிக்கி பொண்டிங் (1598) ஆகியோரை தொடர்ந்து 1500 ஓட்டங்களுக்கு மேல் கடந்த 3வது வீரர் என்ற பெருமையை பெற்றார். இவர் மொத்தம் 1527 ஓட்டங்கள் குவித்துள்ளார்.