பெற்ற குழந்தையை தூக்கியெறிந்த தாய்!!

438

Baby

டயகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டயகம 4ம் பிரிவு தோட்ட குடியிருப்பு பகுதியில் உள்ள மரக்கறி தோட்டமொன்றிலிருந்து சிசு ஒன்றை டயகம பொலிஸாரும்,பொது மக்களும் நேற்று மீட்டுள்ளனர்.

குறித்த சிசு நேற்று மாலை 6 மணியளவில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. சிசு டயகம பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக பொலிஸாரால் அனுமதிக்கப்பட்ட போதும், சிசுவின் நிலைமையும்,தாயின் நிலைமையும் மிக கவலைக்கிடமாக இருந்ததால் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

எனினும் சிசுவின் தாய் தலைமறைவாகியிருந்ததை தொடர்ந்து பொலிஸாரும் பொதுமக்களும் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது தனது வீட்டில் உறங்கி கொண்டிருந்த நிலையில் சம்மந்தப்பட்ட தாயை பொலிஸார் பாதுகாப்புடன் மீட்டு வைத்தியசாலைக்கு அழைத்து சென்றனர்.



இதன் போது தாயாரை விசாரித்த போது இன்னும் திருமணம் முடிக்காதவர் எனவும் 19வயது எனவும் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இப்பிரதேசத்தில் கடந்த காலங்களில் சிசுக்களை கழுத்தை முறித்து கொன்ற சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிக்கின்றனர்.

அத்தோடு பொது மக்கள் மத்தியில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற இடமளிக்ககூடாது என்பதற்காக டயகம பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஏற்பாட்டில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு திட்டங்களை முன்னெடுக்கப்போவதாக டயகம பொலிஸ் அதிகாரி ஹேரத் தெரிவித்துள்ளார்.