பிரித்தானிய நாடாளுமன்றத்தில் கேம் விளையாடிய எம்.பி : வெடித்தது சர்ச்சை!!

473

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் எம்.பி ஒருவர் தனது ஐபோனில் விளையாடிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானிய நாடாளுமன்றத்தில் மிக முக்கியமான ஓய்வூதியம் மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. அப்போது விவாதத்தின் பெரும் பகுதி நேரத்தில் நிகில் மில்ஸ் என்ற எம்.பி., தனது ஐபோனில் கண்டி க்ரஷ் (Candy crush) என்னும் விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.

இந்த காட்சி அந்நாட்டின் பிரபல நாளிதழ் ஒன்றில் புகைப்பட ஆதாரத்துடன் வெளியிடப்பட்டதால், அங்கு மிகப் பெரிய சர்ச்சை கிளம்பியுள்ளது.

இந்நிலையில் பின்தங்கிய அம்பர் பள்ளத்தாக்கிலிருந்து நாடாளுமன்ற எம்.பியாக நிகில் மில்ஸ் தெரிவு செய்யப்பட்டதால், நாடாளுமன்றத்தின் மேன்மை அறியாமல் இவர் நடந்துகொண்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் அவர் மீது குற்றம்சாட்டியுள்ளன.

இதுகுறித்து நிகில் மில்ஸ் கூறியதாவது, நான் கூட்டத்தில் கண்டி க்ரஷ் விளையாடியது உண்மை, ஆனால் விவாதத்தில் நான் பங்கேற்காமல் இல்லை, பல கேள்விகளை நான் எழுப்பி, விவாதத்தில் ஆக்கத்துடன் பங்கேற்றேன்.



சில நேரம் மட்டுமே விளையாடினேன், இனி இது போன்ற தவறு ஏற்படமால் பார்த்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

M1 M2 M3