நாடக நடிகர்கள் விஷாலுக்கு மிரட்டல்!!

409

Vishal

நடிகர் சங்கம் பிரச்சனை தற்போது உச்சக்கட்ட நிலையை அடைந்துள்ளது. நாசர், விஷால் தலைமையில் இளம் நடிகர்கள் பட்டாளம் ஒரு பக்கம், சரத்குமார், ராதா ரவி என இவர்கள் ஒரு பக்கமாக பிரிந்து உள்ளனர்.

இந்நிலையில் மதுரை, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, சேலம், கோவை உட்பட 16 இடங்களில் நாடக நடிகர் சங்கங்கள் உள்ளன. இவை தென்னிந்திய நடிகர் சங்கத்துடன் இணைக்கப்பட்ட அமைப்புகள் என்பதால், நடிகர் சங்கத் தேர்தலில் நாடக நடிகர்களும் வாக்களிப்பார்கள்.

நாடக நடிகர்கள் பெரும்பாலும் ராதா ரவிக்கே தங்கள் ஆதரவுகளை தருவார்கள்.தற்போது தமிழ் நாடு நாடக நடிகர் சங்க துணைத் தலைவர் கலைமணி பேசும்போது, “நாடக நடிகர்களுக்காக போராடி வருகிற சரத்குமார், ராதாரவி போன்றவர்களை தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இருந்தே ஒதுக்க விஷால் போன்ற இளைய நடிகர்கள் முயற்சி செய்கிறார்கள். நாடக நடிகர்களை மன்சூர் அலிகான் இழிவாகப் பேசுகிறார்.



நாடக நடிகர்களை தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உட்கார வைத்தவர் ராதா ரவி. அவர் இல்லை என்றால், நமக்கு சங்கம் எங்கிருக்கிறது என்றே தெரிந்திருக்காது. சரத்குமார், ராதாரவி ஆகியோரது கரங்களை நாம் வலுப்படுத்த வேண்டும். சங்கத்துக்கு எதிராகப் பேசும் விஷால், மன்சூர் அலிகானை கண்டிக்கிறோம். என்று கூறியுள்ளனர்.