டுபாயில் 11 வயது இந்திய சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்த இலங்கையர் கைது!!

431

Abuse

ஐக்கிய அரபு இராச்சியம் – டுபாயில் 11 வயது சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்ததாக இலங்கையர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அல்குசேயின் என்ற கடையில் ஒக்டோபர் 7ம் திகதி இந்திய சிறுமியை வல்லுறவு செய்யும் நோக்கில் தொட்டு சேஸ்டை புரிந்ததாக சிறுமி தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார். அதன்பின் சிறுமியின் பெற்றோர் அல்குசேயின் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

முறைப்பாட்டின் அடிப்படையில் 31 வயதான இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணை ஜனவரி 6ம் திகதி இடம்பெறவுள்ளது. குறித்த இலங்கையர் சிறுமியை தொடும் காட்சிகள் சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.