எதிர்வரும் உலகக்கிண்ணத் தொடருடன் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுப் பெறப்போவதாக இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்காரா அறிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணியுடனான 6வது ஒருநாள் போட்டியில் பெற்றி பெற்ற இலங்கை அணி தொடரையும் கைப்பற்றியது. இந்த போட்டியில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய சங்கக்காரா சதத்தினைப் பெற்றுக்கொண்டதுடன், சிறப்பாட்டக்காரராகவும் தெரிவானார்.
இந்நிலையில் எதிர்வரும் உலகக்கிண்ணத் தொடருடன் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், இங்கிலாந்து அணிக்கு எதிரான 7வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது. இந்தப் போட்டி சங்கக்காரா தனது செந்த மண்ணில் விளையாடும் கடைசி போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.






