நேற்று (18.12) சர்வதேச புலம் பெயர் தினத்தை முன்னிட்டு வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியம் ,தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர்கள் அமைப்பு, ஆதி விநாயகர் ஆலய பரிபாலன சபையினர் இணைந்து ஏற்பாடு செய்த புலம் உறவுகள் நலமாய் வாழ வேண்டி விசேட பூசை நிகழ்வு வவுனியா வைரவபுளியங்குளம் ஆதி விநாயகர் ஆலயத்தில் வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றிய செயலாளர் சிவஸ்ரீ பிரபாகரகுருக்கள் தலைமையில் மாலை 6.30 மணிக்கு இடம் பெற்றது.
இந்த நிகழ்வில் ஆதி விநாயகர் ஆலய பிரதமகுருவும், வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றிய உப செயலாளருமான சிவஸ்ரீ திவாகர குருக்கள், வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றிய உறுப்பினரும் ஞான வைரவர் ஆலய பிரதம குருக்களுமான சிவஸ்ரீ கேசவ குருக்கள், கோவில் சிவாசாரியார்கள், வவுனியா மாவட்ட கலாசார உத்தியோகத்தர் திரு.நித்தியானந்தன், முன்னாள் பிரதேசசெயலாளர் திரு.ஐயம்பிள்ளை, முன்னாள் இலங்கை வங்கி முகாமையாளர் சிவபாலன், ஆலய பரிபாலன சபை தலைவர் திரு தில்லை நாதன், தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர்கள் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன் )செயலாளர் மாணிக்கம் ஜெகன் சமூக ஆர்வலர் யோகன் , உட்பட புலம் பெயர்ந்த உறவுகளின் பெற்றோர், நலன் விரும்பிகள், பக்தர்கள் என பலர் கலந்து கொண்டனர் .
விசேட பூசை நிகழ்வுகளை சிவஸ்ரீ பிரபாகர குருக்கள் ,சிவஸ்ரீ கேசவ குருக்கள் ,சிவஸ்ரீ திவாகர குருக்கள் நடத்தி வைத்தனர் ,
தமிழ் விருட்சத்துடன் இணைந்து செயற்படும் உறவுகளின் பெயர்கள் வாசிக்க பட்டு அர்ச்சனை செய்ய பட்டதுடன் , இந்தியாவில் முகாங்களில் வசிக்கும் உறவுகளுக்கும் ,மத்திய கிழக்கில் தொழில் நிமித்தம் வசிக்கும் உறவுகளுக்கும் , ஐரோப்பா, ஆசிய, அமெரிக்க, அவுஸ்திரேலிய உட்பட புலம் பெயர்ந்து வசிக்கும் அனைத்து உறவுகளும் நலமாகவும் ,நிம்மதியாகவும் சந்தோசமாகவும் வாழ வேண்டி கோமம் வளர்த்து விசேட பூசை நடைபெற்றது.
நிகழ்வில் உரையாற்றிய சிவஸ்ரீ பிரபாகரகுருக்கள் புலம் பெயர்ந்த உறவுகள் தான் எம் மக்களின் ஜீவ நாடியாக உள்ளதாகவும் அவர்களின் நிம்மதியான வாழ்வுக்கு நாம் அனைவரும் பிரார்த்திப்பது இன்றி அமையாதது எனவும் கட்டாயம் இந்த புலம் பெயர் உறவுகள் தினத்தில் அனைவரும் அவர்களுக்காக பிரார்த்திக்க வேண்டும் என்றும் மேலும் இந்தியா, மத்திய கிழக்கு உட்பட புலம் பெயர்ந்து வசிக்கும் அனைத்து மக்களும் நலமாய் இருக்க ஆதி விநாயகரை வேண்டி கொள்வதாகவும் ,அந்த உறவுகள் நலமாய் இருக்க வேண்டும் என்று இந்த பூசை நிகழ்வை ஏற்பாடு செய்த தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் கண்ணனுக்கும், ஜெகனுக்கும் நன்றியை தெரிவித்து கொண்டதுடன் ஆலய பரிபாலன சபை பிரதமகுருக்களுக்கும் நன்றியை தெரிவித்து கொண்டார்
பின்னர் சிவஸ்ரீ பிரபாகர குருக்களின் நன்றி உரை இடம் பெற்றது .
அதன் பின்னர் கலந்து கொண்ட அனைவருக்கும் விபூதி பிரசாதம், அர்சனை வழங்க பட்டு பூசை நிகழ்வு நிறைவடைந்தது.