குடிவெறியில் காரை செலுத்திய நடிகரை நடமாடும் நீதிமன்றத்திற்கு அனுப்பிய பொலிஸ்!!

431

Jai

குடிவெறியில் கார் ஓட்டிய நடிகர் ஜெய்க்கு பொலிசார் அபராதம் விதித்துள்ளனர். நடிகர் ஜெய், நேற்று இரவு தனியார் விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு விட்டு ராயப்பேட்டையில் இருந்து அடையாறு நோக்கி ராதாகிருஷ்ணன் சாலை வழியாக சென்று கொண்டு இருந்தார்.

அப்போது மயிலாப்பூர் திருவள்ளுவர் சிலை அருகே போக்குவரத்து புலனாய்வு பொலிசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது, அந்த வழியாக வந்த நடிகர் ஜெய்யின் காரை சோதனை செய்தனர்.

அப்போது அவர் மது அருந்தி இருப்பதும் 51 சதவீதம் அல்கஹோல் கலந்து இருப்பதும் பொலிசார் வைத்திருந்த கருவி மூலம் உறுதி செய்யப்பட்டது.

தொடர்ந்து பொலிசார் அவரை வாகனத்தை ஓரமாக நிறுத்தும்படி தெரிவித்தனர். நடிகர் ஜெய் வாகனத்தை ஒரம் கட்டுவதற்காக காரை ஓட்டிச் சென்ற போது, பொதுமக்கள் அவருடன் புகைப்படம் எடுக்க ஆர்வம் காட்டினர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதால், பொலிசாரிடம் அபாரதத்துக்கான ரசீது பெற்றுக் கொண்டு சென்று விட்டார். அவர் நடமாடும் நீதிமன்றத்தில் இந்த அபராதத் தொகையை செலுத்த வேண்டும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.